நியூயார்க்:
உக்ரைனில் மனிதாபிமான நிலைமை குறித்த விவாதிக்க கோரி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. சிரியா, வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷியாவின் தீர்மானத்தை ஆதரித்தன.
இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான ஆக்ரமிப்பு குறித்த ரஷியாவின் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. மனிதாபிமானப் அடிப்படையில் போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்டவை அந்த தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தன.
ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் உரை நிகழ்த்தப்படவில்லை. மேலும் இந்தியா உட்பட 13 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
தீர்மானம் நிறைவேற ஒன்பது ஆதரவு வாக்குகள் தேவைப்பட்டதால் ரஷியா கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.