வாஷிங்டன்:
ரஷிய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், சி.என்.என். டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு நின்று விட்டதாக தகவல் வெளியானதை மறுத்தார்.
அவரிடம். “உக்ரைனில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சாதித்தது என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “புதின் இன்னும் சாதிக்கவில்லை. ஏற்கனவே நிறுவப்பட்ட திட்டங்கள், நோக்கங்களின்படி தாக்குதல் நடக்கிறது. புதினின் முக்கிய குறிக்கோள்கள், உக்ரைனின் ராணுவ திறனை அகற்றுவது, உக்ரைனை ரஷிய எதிர்ப்பு மையத்தில் இருந்து நடுநிலை நாட்டுக்கு மாறுவதை உறுதி செய்வதாகும்” என பதில் அளித்தார்.