கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், தென்சென்னை வடக்கு மாவட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, நாம் தமிழர் மற்றும் அம்பேத்கர் இயக்கம் ஆகிய கட்சிகளை சார்ந்தவர்கள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.