ஜெனிவா: உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது ஓட்டளிக்காமல் இந்தியா புறக்கணித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தாக்குதலை நிறுத்த ரஷ்யாவிடம் பல உலக நாடுகள் அறிவுறுத்தி வந்தாலும், ரஷ்யா பின்வாங்கவில்லை. இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா குறிப்பிடவில்லை.
இந்த கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) உள்ளிட்ட 13 நாடுகள் ஓட்டளிக்காமல் நடுநிலை வகித்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யாவும், அதன் நட்பு நாடான சீனாவும் மட்டுமே ஓட்டளித்தன. இதனால் இந்த தீர்மானம் போதிய ஆதரவு இல்லாததால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடைந்தது.
Advertisement