நீண்டநாள் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த மஹா திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியிடு…!

இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் நடிகை
ஹன்ஷிகா
மோத்வானி நடிப்பில்

மஹா
திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகியுள்ளது. சிம்பு இந்தப் படத்தில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ஶ்ரீகாந்த்தும் இப்படத்தில் நடித்துள்ளார்.

Etcetera Entertainment
நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.இப்படத்திலிருந்து வெளியான
போஸ்டர்கள்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. ஆனால் படம் வெளியாவதில் தொடர்ந்து

சிக்கல்
நிலவி வருகிறது.இந்நிலையில் மஹா திரைப்படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது.இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா படம் வெளியில் வராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு இவ்வளவு நேரம் எடுத்தது ஏமாற்றம் என்று நான் கூறுவேன். ஆனால் மீண்டும், இது எனது
50வது படம்
என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தற்போது என்னுடைய 55வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, மஹா படத்தின்வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஸ்கிரிப்ட் பிரமாதம், படம் நன்றாக வந்திருக்கிறது. விரைவில் எல்லாம் சீராகும் என்றும், எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்

தற்போது நீண்ட நாட்கள் வெளியாகாமல் இழுபறியில் இருந்து வந்த ‘மஹா’ திரைப்படம் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மஹா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் தற்போது படத்தை குறித்து ஆவலாக உள்ளனர்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.