வந்தாச்சு ஆர்டர்.. பொட்டியை கட்டும் இன்போசிஸ் ஊழியர்கள்..!

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கப்பட அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் சொந்த ஊரில் இருக்கும் அனைத்தும் ஊழியர்களும் பொட்டி படுக்கை உடன் வேலை செய்யும் ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.

ஆபீஸ்-க்கு வரனுமா.. எனக்கு வேலையே வேணாம்.. ராஜினாமா செய்யும் ஊழியர்கள்..! #WFH

இப்படி என்ன அறிவிப்பு வந்துள்ளது..?

இன்போசிஸ் ஊழியர்கள்

இன்போசிஸ் ஊழியர்கள்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஊழியர்கள் கடந்த 2 வருடமாகக் கொரோனா தொற்றுக் காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையிலும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இருந்தது.

மார்ச் 31

மார்ச் 31

இந்நிலையில் மார்ச் 31 முதல் அனைத்துக் கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் இன்போசிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு முக்கியமான ஈமெயில் அனுப்பியது.

ஏப்ரல் 1
 

ஏப்ரல் 1

இந்த ஈமெயிலில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி பெற்றவர்களைத் தவிரப் பிற அனைத்து ஊழியர்களும் வாரத்தில் 2 நாள் அலுவலகத்திற்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டாயம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. முதலில் இதை விருப்பத்தின்படி வரலாம் என அறிவிக்கப்பட்டாலும், பின்பு அனைத்து பிரிவுகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரு நகரங்கள்

பெரு நகரங்கள்

இதனால் சொந்த ஊரிலும், வெளியூரிலும் இருக்கும் இன்போசிஸ் ஊழியர்கள் வேகவேகமாகப் பணியாற்றும் பெரு நகரங்களுக்குப் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும் பெரு நகரங்களில் இதுநாள் வரையில் காலியாக இருந்த வீடுகள் தற்போது வேக வேகமாகப் புக் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப் பிரச்சனை

புதுப் பிரச்சனை

விரைவில் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் அறிவிப்பை வெளியிட உள்ளது. இதேபோல் ஐடி நிறுவனங்கள் தற்போது மிகவும் முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. அலுவலகத்திற்குக் கட்டாயமாக அழைக்கப்படும் ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்யத் தயாராகிறார்கள் என ஆய்வு கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys ordered to employees back to office from April 1; Its officially end of WFH

Infosys ordered to employees back to office from April 1; Its officially end of WFH வந்தாச்சு ஆர்டர்.. பொட்டியை கட்டும் இன்போசிஸ் ஊழியர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.