1000% வரை லாபம் கொடுத்த பென்னி பங்குகள்.. மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் முதலீட்டாளர்களிடம் இருக்கும் ஒரு கேள்வி, இந்த காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பது தான்.

ஏனெனில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல கொரோனா, டெல்டா வைரஸ், ஓமிக்ரான் என வரிசைக் கட்டி நடப்பு ஆண்டில் சந்தையை பதம் பார்த்துள்ளது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் கூட நல்ல லாபம் கொடுத்த பென்னி பங்குகளை பார்க்கலாம் வாருங்கள்.

ரஷ்யாவில் விஸ்வரூபம் எடுக்கும் விலைவாசி உயர்வு.. மக்கள் வேதனை..!

பென்னி பங்கு என்றால் என்ன?

பென்னி பங்கு என்றால் என்ன?

பொதுவாக பென்னி பங்குகள் என்றாலே ரிஸ்கானது என்ற கருத்து இருந்து வருகின்றது. ஆக இந்த இந்த பென்னி பங்குகளை வாங்கலாமா? அப்படி வாங்கினால் அதனால் என்னென்ன பலன் உண்டு.

பென்னி பங்குகள் இந்தியாவில் பொதுவாக 10 ரூபாய்க்கு கீழாக வர்த்தகமாகும் பங்குகளை அப்படி கூறுவார்கள். இவை ஆபத்தானவை என கூறப்படுகின்றன. ஏனெனில் குறைந்த விலையில் இருக்கும் பங்குகளாக இருக்கும். இவை எதனால் சரிந்துள்ளன என்பதனை தெரிந்து கொண்டு முதலீடு, முதலீடு செய்வது லாபம் கொடுக்கலாம்.

ஏன் லாபகரமானது?

ஏன் லாபகரமானது?

பென்னி பங்குகளை பொறுத்தவரையில் குறைந்த முதலீட்டில் நிறைய பங்குகளை வாங்க முடியும். இதனால் இப்பங்குகள் அதிகரிக்கும்போது நல்ல லாபத்தினையும் பெற முடியும். அதே சமயம் இதில் ஆபத்தும் அதிகம். ஏனெனில் சிறப்பாக செயல்படாத ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைத்துக் கொண்டு, ரிஸ்க் எடுக்க நினைத்தால் அது பிரச்சனை தான். மொத்தத்தில் பென்னி பங்காக இருந்தாலும், அதன் பின்னணி என்ன? ஏன் இந்தளவுக்கு சரிவு ஏற்பட்டது? என்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

ரூ.1 லட்சம் 10 லட்சமானது எப்படி?
 

ரூ.1 லட்சம் 10 லட்சமானது எப்படி?

நடப்பு ஆண்டில் பல மடங்கு லாபம் கொடுத்த 24 பென்னி பங்குகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால் இன்று அதன் மதிப்பு 10 லட்சம். இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்குகள் பரிந்துரை செய்யப்படவில்லை. இது விவரங்களுக்காக எழுதப்பட்ட ஒன்று. அப்படியும் வாங்க வேண்டுமெனில் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வாங்கி வைக்கலாம்.

செஜல் கிளாஸ்

செஜல் கிளாஸ்

8634% ஏற்றத்துடன் செஜல் கிளாஸ் (Sejal Glass) இந்த லிஸ்டில் முன்னணியில் உள்ளது. இந்த பங்கின் விலையானது மார்ச் 3, 2021 அன்று 3.64 ரூபாயாக வர்த்தகமாகி வந்த நிலையில், மார்ச் 22, 2022 அன்று 317.90 ரூபாயாக வர்த்தகமாகியது. மறுபுறம் இதே காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 17% மட்டுமே ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இதில் பிஎஸ்இ மிட் கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 17.44% மற்றும் 34.88% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

2000% மேல் ஏற்றம்

2000% மேல் ஏற்றம்

HCP பிளாஸ்டீன் பல்க்பேக், சேலம் ஈரோடு இன்வெஸ்ட்மென்ட்ஸ், வெஜிடபிள் ப்ராடக்ட், எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ், கிரெசாண்டா சொல்யூசன்ஸ், ஃப்ளோமிக் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ராதே டெவலப்பர்ஸ் (இந்தியா) உள்ளிட்ட பங்குகள் 2000% மேலாக ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் பங்குகள் 10 ரூபாய்க்கு கீழாக இருந்து ஏற்றம் கண்டன.

1000 - 2000% ஏற்றம்

1000 – 2000% ஏற்றம்

சென்னை ஃபெடரஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐஎஸ்எஃப், பிரைட்காம் குரூப், ஆதி நாத் டெக்ஸ்டைல்ஸ், கூப்சுரத், என்சிஎல் ரிசர்ச், JITF இன்ஃப்ராலாஜிஸ்டிக்ஸ், எலிகன்ட் ஃப்ளோரிகல்ச்சர் & அக்ரோடெக், ஷா அலாய்ஸ், பான் இந்தியா கார்ப்பரேஷன், குஜராத் கிரெடிட் கார்ப்பரேஷன், ரஜ்னிஷ் வெல்னஸ், விசாகர் பிசினஸ் மற்றும் காகதியா டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பங்குகள் 1000% முதல் 2000% வரையில் அதிகரித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These 24 penny shares delivered over 1000% return in current financial year: do you have it?

These 24 penny shares delivered over 1000% return in current financial year: do you have it?/1000% வரை லாபம் கொடுத்த பென்னி பங்குகள்.. மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

Story first published: Thursday, March 24, 2022, 16:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.