நடிகர் மோகன்- குஷ்புவின் ‘ஹரா’ படப்பிடிப்பு தொடக்கம்: புகைப்படத் தொகுப்பு

நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் மோகன் மீண்டும் ‘ஹரா’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கும் இப்படத்தில் குஷ்பு நாயகியாக நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.சண்டைக் காட்சியுடன் முதல் நாள் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் ஊட்டியில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவதுபோல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதைக் கதைக்களமாகக் கொண்டு படம் உருவாக்கப்படுகிறது.

image

image

image

மோகன் நடிப்பில் தமிழில் கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ‘சுட்டப்பழம்’ வெளியானது. கன்னடத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ’அசோகவனா’படத்தில் நடித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.