கனடாவில் உணவுப்பொருள் ஒன்றில் வைரஸ் பாதிப்பு: உணவுப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு


கனடாவில், சிப்பி வகை உணவு ஒன்றில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அதை திருப்பிக் கொடுக்குமாறு கனேடிய உணவுப் பாதுகாப்பு அமைப்பு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Deep Bay பகுதியில், இம்மாதம் (மார்ச்) 3ஆம் திகதி பிடிக்கப்பட்ட சிப்பிகளில்தான் பிரச்சினை இருப்பதாகக் கருதப்படுகிறது.

Stellar Bay Shellfish பிராண்ட் Chef Creek Oysters என்னும் அந்த சிப்பிகளில் norovirus என்னும் ஒருவகை வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த norovirus பாதித்த உணவுப்பொருட்களை உட்கொண்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிடிப்பு, குறைந்த அளவில் காய்ச்சல், தலைவலி, குளிர் நடுக்கம், தசை வலி மற்றும் களைப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவு மூலம் பரவும் நோய் ஒன்று பரவுவதாக தெரியவந்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, இந்த norovirus பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனாலேயே அந்த சிப்பிகள் திரும்பப்பெறப்படுவதாகவும் கனேடிய உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சிப்பிகள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டுமல்லாது, கனடாவின் பிற பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

உணவகங்களானாலும் சரி, வீடுகளானாலும் சரி, யார் இந்த சிப்பிகளை வாங்கியிருந்தாலும், அவற்றை ஒன்றில் திருப்பிக் கொடுத்துவிடவோ அல்லது குப்பையில் வீசி விடவோ செய்யுமாறு கனேடிய உணவு பாதுகாப்பு அமைப்பு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.