ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலி , அலினா கபேவாவை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தும்படி பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் துவங்கி ஒரு மாதம் ஆகியும் அதன் தீவிரம் குறையவில்லை. ஒரு புறம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தாலும், தீர்வு காணப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், விளாடிமிர் புடினின் 38 வயது காதலியும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபேவாவை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து புடினின் ‘ரகசிய’ குழந்தைகளுடன் அலினா கபேவா, சுவிட்சர்லாந்தில் உள்ள அல்தாய் மலைகளில் அமைந்துள்ள ஒரு சொகுசு மாளிகையில் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன் ,பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த குடிமக்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மனு ஒன்றில் கையெழுத்திட்டு, புடினின் காதலி அலினாகபேவாவை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ரஷ்யாவுக்கு நாடு கடத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement