உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, உக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடங்கி சரியாக ஒரு மாதம் ஆகிறது என கூறினார்.
உக்ரைனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கப்படும் மோதல்கள் திட்டமிடப் படி நடந்து வருகிறது, அறிவிக்கப்பட்ட அனைத்து இலக்குகளும் அடையப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே உக்ரைன் படைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது என Maria Zakharova தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரசாயன குண்டு வீசி தாக்குதல்… ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆனால், அவர் எந்தப் பகுதியைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
💬#Zakharova: Exactly one month since the start of the special military operation in #Ukraine; it is going according to plan, and all the stated goals will be achieved.
☝️ Life is returning to normal in the territories already liberated from nationalists. pic.twitter.com/QRdiA6lx1i
— MFA Russia 🇷🇺 (@mfa_russia) March 24, 2022
Maria Zakharova-வின் இந்த கூற்று பெரும்பாலான மேற்கத்திய ஆய்வாளர்கள் மற்றும் அரசாங்கங்களால் மறுக்கப்படுகிறது.
புடினின் திட்டம் உண்மையில் திட்டமிடப் படி நடக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.