பீஸ்ட் படத்திற்கு மேலும் ஒரு சோதனை ? குழப்பத்தில் ரசிகர்கள்..!

விஜய்
நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும்
பீஸ்ட்
படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து
நெல்சன்
இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் அவர்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக படத்திலிருந்து வெளியான பாடல்களும் போஸ்டர்களும் அமைந்துள்ளது. பாடலை வெளியிடுவதற்கே வித்யாசமான ப்ரோமோவை பயன்படுத்திய நெல்சன் படத்தில் விஜய்யை வேறுவிதமாக காட்டியிருப்பார் என எதிர்பார்த்து உள்ளனர்.

விஜய் சேதுபதியின் இந்த மனசு யாருக்கு வரும் ? வெளியான தகவலால் குவியும் பாராட்டுக்கள்..!

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இப்படம் தணிக்கை குழுவினால் சென்சார் செய்யப்பட்டு U /A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனவே படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் விரைவில் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது வெளியான சில புகைப்படங்களினால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பீஸ்ட் படத்தின் ஒர்கிங் ஸ்டில்ஸ் சமூகத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டதா இல்லை லீக்காகி உள்ளதா என தெரியாமல் குழம்பி உள்ளனர் ரசிகர்கள். மேலும் இதை சிலர் ஷேர் செய்து வருவதால் பல ரசிகர்கள் இது அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை எனவே யாரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்யவேண்டாம் என கோரிக்கை வெய்துவருகின்றனர்.இதற்கு முன்பு சில முறை பீஸ்ட் படத்திலிருந்து புகைப்படங்கள் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.