உ.பி. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த மாநிலத்தில் முதலமைச்சராக இருப்பவர் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளை வென்று பாஜக ஆட்சியை தக்க வைத்தது. நாளை மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் படக்குழுவினருக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.