மூட்டுவலியால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இதனை எளிய முறையில் போக்க இதோ சில எளிய மருத்துவங்கள்


 பொதுவாக இன்றைக்கு பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலிக்கு உள்ளாகிறார்கள்.

மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்கள்.

இவற்றை ஆரம்பத்திலே சரி செய்ய ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம். 
  • ஒரு சிறிய இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
  • ஒரு பக்கெட் குளியல் நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.
  •  ஒரு கப் சூடான (இதமான சூட்டில்) தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரப் பொடியைச் சேர்க்கவும். வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை மசாஜ் செய்யவும்.
  • ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.
  • ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து நிமிடங்கள் ஒத்திடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது,
  • மூட்டு வலி குணமாக பிண்ட தைலம் பயன்படுத்தலாம். இந்த தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த தைலத்தை வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வலி குறையும்.

     

  • முடக்கறுத்தான் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.