தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேகதாது அணைய கட்டுவதற்கு கர்நாடக அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த திருமணத்திற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை கர்நாடக சட்டப்பேரவையில் தமிழக அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார் இந்நிலையில் இன்று கர்நாடக சட்டப்பேரவையில் தமிழக தீர்மானத்தை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் அடிப்படை உரிமை என்றும் இதனை தடுப்பதற்கு தமிழகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.