புதுடில்லி:இந்தியாவின், ‘ஆன்லைன்’ பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில், என்.பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தால், 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட, யு.பி.ஐ., எனப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தளத்தை, பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரை, இதன் வாயிலாக, 452.75 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றில் மொத்தமாக, 8.27 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த யு.பி.ஐ., தளம், நம் அண்டை நாடான நேபாளத்தில் அறிமுகம் செய்யப் பட்டு உள்ளது. இதுகுறித்து நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவின், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது அந்நாட்டில், இருநபர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனை மற்றும் வணிகர் – வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பணப்பரிவர்த்தனைகளை மேம்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த யு.பி.ஐ., தளம், சமீபத்தில் பூட்டானில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement