நண்பர்களுடன் பிரான்சுக்கு சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்!


பிரான்சில் பேஸ் ஜம்பிங் விளையாட்டில் ஈடுபட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் மேற்கு நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள நியூன்ஹாம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர், தனது 5 நண்பர்களுடன் பிரான்சுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார்.

பேஸ் ஜம்பிங் வீரரான அவர் தென்கிழக்கு பிரான்சில் போர்ன் கோர்ஜஸில் உள்ள போர்னிலன் (Bournillon) குன்றிலிருந்து குதித்துள்ளார்.

ஆனால் அவரது பாராசூட் சரியான நேரத்தில் திறக்கப்படவில்லை என்பதை அவரது நண்பர்கள் கவனித்துள்ளார்.

அவர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பியதையடுத்து மலை மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அவர் குதித்த இடத்திலிருந்து சுமார் 650 அடிக்கு கீழே ஒரு விளிம்பில் கண்டெடுக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

GettyImages

அவரது பேஸ் ஜம்பிங் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்படவில்லை என ஆரம்பக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அவரது மரணம் மனிதத் தவறால் ஏற்பட்டதா என்பதும் இன்னும் தெரியவில்லை.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பல மணி நேரம் கழித்து, புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

“விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம். அந்த நபர் தனது பாராசூட்டை திறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அவர் குன்றிலிருந்து குதித்தார் என்று நாங்கள் நினைக்கிறோம், அவர் பாராசூட்டைத் திறந்தார் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அது சற்று தாமதமாக இருக்கலாம்.

அவர் குதித்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் கீழே ஒரு பாறை விளிம்பில் அவரைக் கண்டோம். அவர் பாறையில் மோதி மரத்தில் சிக்கினார்.

மீட்பு பணி கடினமாக இருந்தது. நிலப்பரப்பு கிட்டத்தட்ட அணுக முடியாததாக இருந்தது மற்றும் இருட்டாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர் உயிருடன் ஆனால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் நிறைய இரத்தத்தை இழந்திருந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அடுத்த நாள் அதிகாலை 2 மணியளவில் அவர் இறந்தார்” என்கிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.