ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம்

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைன் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உக்ரைன் மீது படையெடுத்து ஒருமாதம் ஆகிவிட்ட நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி அழித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்தன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்து, கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் 140 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.

இந்தியா உள்ளிட்ட 38 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மோதலைத் தணிப்பதற்கு பங்களிக்க வேண்டும் என்று உறுதியாக நம்புவதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி திருமூர்த்தி குறிப்பிட்டார். மக்களின் துன்பங்களுக்கு உடனடி முடிவு காண, இரு தரப்பையும் ஒன்றிணைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.