பெண் குழந்தைகளின் மாதவிடாய் நேரத்தில் டம்பான், பேட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு: ஆன்லைனில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது

சென்னை: பெண் குழந்தைகள் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் டம்பான், பேட் உள்ளிட்டவை குறித்த ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (சனி) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக அரசின் ஐசிடிஎஸ் மற்றும் பாரதப் பிரதமரின் போஸ்ஹன் அபியானும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.

பெண் குழந்தைகளிடம் ஊட்டச்சத்தின் தேவையையும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கும் வகையில் நடைபெறும் இந்த ஆன்லைன் நிகழ்வில், அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் ஆலோசகரும், முதியோர் நல சிறப்பு பயிற்சியாளருமான டாக்டர்கெளசல்யா நாதன், தெற்கு ரயில்வே அலுவலரும், சர்வதேச கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான வித்யா வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்க உள்ளனர். இந்த நிகழ்வில் 11 முதல் 19 வயது வரையுள்ளபெண்கள் அவர்களது பெற்றோர்களுடன் பங்கேற்கலாம்.

பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் தேவையை வலியுறுத்தும் தமிழக அரசின் தூதுவரான ஹாசினி லெட்சுமி நாராயணன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கு கிறார். இந்நிகழ்வின் ஸ்ட்ராடிஜிக் பார்ட்னராக சென்னை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ், தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்பும், மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்துள்ளன.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00392 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.