பிரபல தமிழ் நடிகை பாஜகவில் இருந்து விலகல்.!!

குட்டி பத்மினி தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். தமிழகத் திரைப்படத்துறையில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் “ஆம்பள அஞ்சுலம்” எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் திரையுலகின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குட்டி பத்மினி பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், குட்டி பத்மினி  அரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் கடந்த 11 வருடங்களாக பாஜகவில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறேன். தற்போது பாஜகவிலிருந்து விலகுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வேலைகள் மும்பையில் அதிகம் இருப்பதால், அரசியலில் ஈடுபட தேவையான நேரம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.