துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார்.
நான்கு நாள் பயணமாக சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். அவரை துபாய்க்கான இந்திய துணைத் தூதர் அமன்பூரி, துபாய் அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று தொழில் கண்காட்சியைப் பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரங்கை திறந்துவைக்க உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, முக்கிய துறைகளின் அமைச்சர்கள்,தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.