வாஷிங்டன் : ”பல்வேறு தொழில்நுட்பங்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது. ‘ஹைபர்சானிக்’ தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவை முந்திவிட்டன,” என, அமெரிக்க செனட்டர் ஜாக் ரீட் தெரிவித்தார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட்டரும், செனட் ஆயுத சேவை கமிட்டி தலைவருமான ஜாக் ரீட் கூறியதாவது: உலக வரலாற்றில் முதல் முறையாக, அணுசக்தி துறையில் இருந்த இரு தரப்பு போட்டி, தற்போது முத்தரப்பு போட்டியாக மாறி உள்ளது. அமெரிக்கா – ரஷ்யா இடையிலான போட்டி, சீனா – ரஷ்யா – அமெரிக்கா என முத்தரப்பாக மாறியுள்ளது.ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவை விட முன்னேறிவிட்டன. பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணி வகித்த காலம் மலையேறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாஷிங்டன் : ”பல்வேறு தொழில்நுட்பங்களிலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது. ‘ஹைபர்சானிக்’ தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.