புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில், பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:செயற்கைக் கோள்களை அனுப்பும் ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்த, இந்திய தேசிய விண்வெளி நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஐந்து பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ மற்றும் ‘லார்சன் அண்டு டியூப்ரோ’ இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு நிறுவனம், ராக்கெட் தயாரிப்புக்கு முன் வந்துள்ளது. அதுபோல, பாரத மின்னணு நிறுவனம், அதானி என்டர்பிரைசஸ், பாரத எர்த் மூவர்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு நிறுவனமும் இதில் ஆர்வம் காட்டிஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில், பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:செயற்கைக் கோள்களை அனுப்பும் ராக்கெட்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.