பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டுக்குப் பிறகு விடுக்கப்பட்ட அறிக்கையில், உக்ரைன் போரில் ரஷ்யா எந்தவித ரசாயன, அணு ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பொறுப்பான முறையில் நடந்துக் கொள்ளவும் ஜி 7 மாநாட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விநியோகம் அதிகரிக்கவும், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஒபெக் அமைப்பு முக்கியப் பங்காற்றவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.