நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான ஒரு மாத காலப் பகுதியில் 25 மனித படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் கடுகஸ்தோட்டையில் தீ விபத்துச் சம்பவத்தில் இடம்பெற்ற மூன்று மரணங்கள் தவிர மேலும் 25 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான படுகொலைகளில் நான்கு சம்பவங்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய அனைத்து சம்பவங்களும் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர் காமினி லொகுகேவின் பாதுகாப்பு வாகன சாரதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த சம்பவங்களில் உள்ளடங்குகின்றது.
கூரிய ஆயுதங்களினால் தாக்குதல், தடிகளினால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.