மய்யம்ன்னு ஒன்னு கிடையவே கிடையாது: இயக்குனர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..!

தமிழ் சினிமாவின் தற்போதைய அடையாளமாக திகழ்பவர் இயக்குனர்
வெற்றிமாறன்
. திரைப்படங்களின் வாயிலாக இப்படியும் அரசியல் பேசலாம் என்பதை தனது ஒவ்வொரு படங்களின் வாயிலாகவும் உணர்த்தும் வெற்றிமாறனின் இயக்கத்தில் அடுத்ததாக
விடுதலை
படம் வெளியாக உள்ளது.

பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தனது முதல் படத்திலே, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார். பொல்லாதவன், ஆடுகளம் என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். இவரின் ஆடுகளம் படம் ஆறு தேசிய விருதுகளை வாரி குவித்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பு பார்க்க வைத்தார் வெற்றிமாறன்.

இவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான விசாரணை, வடசென்னை, அசுரன் படங்கள் தமிழ் சினிமாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் முத்திரை பதித்து வருகிறார் வெற்றிமாறன். தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி முடித்துள்ள வெற்றிமாறன் அடுத்ததாக
சூர்யா
நடிப்பில்
வாடிவாசல்
படத்தை இயக்க உள்ளார்.

RRR: பாகுபலியை மிஞ்சியதா ‘ஆர் ஆர் ஆர்’.. ராஜமெளலியின் பிரம்மாண்டம் எப்படி இருக்கு.?

இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, ’இன்றைய உலகம் பிளவுபட்டு உள்ளது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்றே கிடையாது. மய்யம் என்று சொல்பவர்களும் வலதுசாரி தான், ஆனால் அதை தேர்வு செய்வதற்கான நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு இயக்குனர் என்பவர் அரசியல்வாதியோ, கணிதமேதையோ, விஞ்ஞானியோ அல்ல. அவர் ஒரு கலைஞர் தான். அவர் எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தான் வாழ்ந்த உலகில் கண்டதை அவர் திரையில் பிரதிபலிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். வெற்றிமாறனின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெயிட்டிங் லிஸ்ட் அதிகம்; இயக்குனர் எழில் கலகல பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.