தூத்துக்குடியில் பட்ட பகலில் நகைக்காக பெண்ணை கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி – எட்டையபுரம் சாலையில் உள்ள ஓம்சக்தி நகரை சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி பவானி நேற்று பிற்பகலில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பவானியின் கழுத்தை நெறித்தும், கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் நகை, பணம் இருக்கிறதா என பார்த்துள்ளனர்.
பின்னர் அவரது காதில் அணிந்திருந்த கம்மல்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த கொலையில் 3பேர் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்