பெட்ரோல், டீசல் விலை 3வது முறையாக லிட்டருக்கு 80 பைசா உயர்வு.. சென்னை, கோவையில் என்ன விலை..?!

5 மாநில தேர்தலுக்காகச் சுமார் 137 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வையும் செய்யாமல் இருந்த மத்திய அரசு கடந்த 4 நாட்களில் 3 முறை விலையை உயர்த்தியுள்ளது. நேற்று ஒரு நாள் எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாத நிலையில், இன்று 3வது முறையாக லிட்டருக்கு பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கடந்த 4 நாட்களில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 2.40 ரூபாய் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மக்கள் மத்தியில் மத்தியில் பெரும் சுமையாக மாறியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது. 3வது நாளாகப் பெட்ரோல் விலை 80 பைசா உயர்ந்தது மூலம் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112.51 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் டீசல் விலை 95.85 ரூபாயில் இருந்து 96.70 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சென்னை

சென்னை

இதேவேளையில் மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் முக்கிய வர்த்தக மாநிலமாக விளங்கும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்றைய 80 பைசா விலை உயர்வு மூலம் 103.67 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசல் விலை 93.71 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 19000 கோடி ரூபாய் நஷ்டம்
 

19000 கோடி ரூபாய் நஷ்டம்

நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத நிலையில் ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய 3 பெரும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு சுமார் 19,000 கோடி ரூபாய் கிட்டத்தட்ட 2.25 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை இழந்துள்ளன என்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.

 பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

  • டெல்லி – 97.81 ரூபாய்
  • கொல்கத்தா – 107.18 ரூபாய்
  • மும்பை – 112.51 ரூபாய்
  • சென்னை – 103.67 ரூபாய்
  • குர்கான் – 98.15 ரூபாய்
  • நொய்டா – 97.76 ரூபாய்
  • பெங்களூர் – 103.11 ரூபாய்
  • புவனேஸ்வர் – 104.36 ரூபாய்
  • சண்டிகர் – 96.59 ரூபாய்
  • ஹைதராபாத் – 110.91 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 109.73 ரூபாய்
  • லக்னோ – 97.67 ரூபாய்
  • பாட்னா – 108.37 ரூபாய்
  • திருவனந்தபுரம் – 108.77 ரூபாய்

 டீசல் விலை

டீசல் விலை

  • டெல்லி – 89.07 ரூபாய்
  • கொல்கத்தா – 92.22 ரூபாய்
  • மும்பை – 96.7 ரூபாய்
  • சென்னை – 93.71 ரூபாய்
  • குர்கான் – 89.38 ரூபாய்
  • நொய்டா – 89.29 ரூபாய்
  • பெங்களூர் – 87.37 ரூபாய்
  • புவனேஸ்வர் – 94.17 ரூபாய்
  • சண்டிகர் – 83.12 ரூபாய்
  • ஹைதராபாத் – 97.24 ரூபாய்
  • ஜெய்ப்பூர் – 93.2 ரூபாய்
  • லக்னோ – 89.22 ரூபாய்
  • பாட்னா – 93.49 ரூபாய்
  • திருவனந்தபுரம் – 95.81 ரூபாய்

 தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை நிலவரம்

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை நிலவரம்

  • அரியலூர் – 104.68 ரூபாய்
  • செங்கல்பட்டு – 103.87 ரூபாய்
  • சென்னை – 103.67 ரூபாய்
  • கோயம்புத்தூர் – 104.2 ரூபாய்
  • கடலூர் – 105.08 ரூபாய்
  • தருமபுரி – 105.25 ரூபாய்
  • திண்டுக்கல் – 104.74 ரூபாய்
  • ஈரோடு – 104.7 ரூபாய்
  • கள்ளக்குறிச்சி – 105.61 ரூபாய்
  • காஞ்சிபுரம் – 104.05 ரூபாய்
  • கன்னியாகுமரி – 104.75 ரூபாய்
  • கரூர் – 103.96 ரூபாய்
  • கிருஷ்ணகிரி – 105.69 ரூபாய்
  • மதுரை – 104.25 ரூபாய்
  • நாகப்பட்டினம் – 105.15 ரூபாய்
  • நாமக்கல் – 104.31 ரூபாய்
  • நீலகிரி – 105.87 ரூபாய்
  • பெரம்பலூர் – 104.59 ரூபாய்
  • புதுக்கோட்டை – 104.54 ரூபாய்
  • ராமநாதபுரம் – 105.42 ரூபாய்
  • ராணிப்பேட்டை – 104.53 ரூபாய்
  • சேலம் – 104.13 ரூபாய்
  • சிவகங்கை – 104.52 ரூபாய்
  • தேனி – 105.08 ரூபாய்
  • தென்காசி – 104.35 ரூபாய்
  • தஞ்சாவூர் – 104.89 ரூபாய்
  • திருவாரூர் – 104.96 ரூபாய்
  • திருச்சிராப்பள்ளி – 104.12 ரூபாய்
  • திருநெல்வேலி – 104.56 ரூபாய்
  • திருப்பத்துர் – 105.86 ரூபாய்
  • திருப்பூர் – 104.59 ரூபாய்
  • திருவள்ளூர் – 103.79 ரூபாய்
  • திருவண்ணாமலை – 105.01 ரூபாய்
  • தூத்துக்குடி – 104.42 ரூபாய்
  • வேலூர் – 105.02 ரூபாய்
  • விழுப்புரம் – 105.46 ரூபாய்
  • விருதுநகர் – 104.82 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Petrol, diesel prices hiked today by 80 paise per liter, Fuel price hiked Third time in four days

Petrol, diesel prices hiked today by 80 paise per liter, Fuel price hiked Third time in four days பெட்ரோல், டீசல் விலை 3வது முறையாக லிட்டருக்கு 80 பைசா உயர்வு.. சென்னை, கோவையில் என்ன விலை..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.