விருதுநகர்: விருதுநகரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. விசாரணை அதிகாரியான எஸ்.பி.முத்தரசி விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணையை துவக்கினார். வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.