வட கொரியாவை தொடர்ந்து பல்வேறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் குறுகிய தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதித்து பார்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவை ஏவுகணை மற்றும் அதன் கட்டுப்பாடு மையத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். அண்மையில் வடகொரியா செலுத்திய ஏவுகணை தலைநகர் பியாங்யாங் அருகில் விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டதகாவும், கடந்த 16ஆம் தேதி அதே விமான நிலையப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்குரிய ஏவுகணை செலுத்தப்பட்ட சிறிது தூரத்தில் விழுந்து வெடித்ததாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.