பாஜிராவ் மஸ்தானி
மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வாக இருந்த பாஜிராவ், வேறு மதபெண்ணான மஸ்தானியைக் காதலிக்கிறார். 18-ம் நூற்றாண்டு கதையை விஷுவலாகவும் ஸ்ட்ராங்காக சொல்லிய இந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார்.
பானிபட்
மராத்திய ஆட்சியாளர்களுக்கும் ஆப்கன் படைகளுக்கும் இடையே நடந்த பானிபட் போரை மையமாக வைத்து அர்ஜுன் கபூர், கிர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடிக்க உருவான படம் ‘பானிபட்’ 2019-ல் வெளியானது.
பத்மாவத்
சஞ்சாய் லீலா பன்சாலி இயக்கிய படம். ராணி பத்மாவதி, அவரின் கணவர் ரத்தன் சிங், ராணியை ஒருதலையாகக் காதலித்து அடையத் துடிக்கும் அலாவுதீன் கில்ஜி என 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘மாலிக் முகமது ஜெய்சி’ எனும் புகழ்பெற்ற கவிஞரால் எழுதப்பட்ட வரலாறை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட படம்.
பாகுபலி
RRR பட இயக்குனர் ராஜ மௌலியின் படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிக்க அசர வைக்கும் காட்சிகள், வலுவான திரைக்கதை என சென்சேஷனல் ஹிட்டடித்த படம்.
பாகுபலி 2
2015-ல் வெளியான பாகுபலியில், `கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்கிற கேள்விக்கு 2017-ல் விடை சொன்னது பாகுபலி 2. பிரமாண்டம் என்பதற்கு முழு நியாயத்தைச் சேர்த்த இரண்டு படங்களும் பான் இந்தியாளவில் கொண்டாடப்பட்டன.
கேசரி
அனுராக் சிங் இயக்கத்தில் 2019-ல் அக்ஷய் குமார் பரினீதி சோப்ரா நடிப்பில் உருவான படம். சரஹர்கி போரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். பிரிட்டிஷ் படையில் இருந்த 21 சீக்குகள் 10000க்கு மேற்பட்ட ஆப்கான் வீரர்களை எதிர்த்து போரிட்ட கதையைப் படமாக மாற்றி மிரள வைத்திருந்தார்கள
ஷ்யாம் சிங்கா ராய்
நானி இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் பெங்கால் எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராயின் சமூக போராட்டங்கள் ஆகியவற்றை பேசியது. சாய் பல்லவி இதில் தேவதாசியாக நடித்திருந்தார்.
தானாஜி (Tanhaji)
17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தானாஜி மலுசரே சத்ரபதி சிவாஜி படையில் போர்த்தளபதியாக இருந்தார். அவரின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தை ஓம் ராவுத் இயக்கியிருந்தார். அஜய் தேவ்கன், சயீப் அலி கான், கஜோல், நேஹா சர்மா நடித்திருந்தனர்.
மொகஞ்சதாரோ
ஹ்ரித்திக் ரோஷன், பூஜா ஹெக்டே நடித்து 2016-ல் வெளிவந்த படம், மறைந்த நகரமான மொகஞ்சதாரோவை திரையில் மீட்டுருவாக்கம் செய்தது. இந்தோ சிவிலியன் வரலாற்றின் ஆரம்பம் என நம்பப்படும் நகரில் வாழ்ந்த மக்கள் பற்றி புனையப்பட்ட படம் பெரியளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.
காஸி அட்டாக்
இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் நீர்மூழ்கி தாக்குதலை இந்திய கடற்படையினர் எதிர்கொள்ளும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ராணா, டாப்ஸி உள்ளிட்டோர் நடிக்க சங்கல்ப் ரெட்டி இயக்கியிருந்தார்.
RRR மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்றைக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதுபோல உங்களுக்குப் பிடித்த வரலாற்றுப் படங்களைக் கமென்டில் சொல்லுங்க!