துபாய் தொழிலதிபர்களை சந்திக்கும் மு.க. ஸ்டாலின்.. மாநிலத்தில் முதலீடு செய்ய அழைப்பு!

பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை துபாய் சென்றார். துபாயில் உள்ள இந்திய தூதர் அமன் பூரி முதல்வரை வரவேற்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வரின் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து மாநிலத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். ஆதாரங்களின்படி, ஃபராபி பெட்ரோகெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஏஐ வாடே, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆசாத் மூப்பன், எமார் பிராபர்டீஸின் சிஇஓ ஹடி பத்ரி மற்றும் ஷரஃப் குழுமத்தின் துணைத் தலைவர் ஷரபுதீன் ஷரஃப் உள்ளிட்டோரை முதல்வர் சந்திக்கிறார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், இந்திய வணிக மற்றும் தொழில்முறை குழுக்களுடன்’ ஐக்கிய அரபு எமிரேட் முதலீட்டாளர்கள் கவுன்சிலை சந்திக்க உள்ளார்.

துபாய் எக்ஸ்போ 2022 இல் தமிழ்நாடு பெவிலியனையும் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வழிகாட்டி நிறுவனத்தின் ஒரு குழு அந்த இடத்தில் இருக்கும். இதன் பின்னர், முதல்வர் ஸ்டாலின், தனது வர்த்தகக் குழுவுடன் ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்துக்கு (Jebel Ali Free Trade Zone) செல்கிறார்.

அபுதாபியில், முபதாலா ரியல் எஸ்டேட் தலைமை நிர்வாக அதிகாரி காலித் ஏஐ குபைசி, மற்றும் அபுதாபி சேம்பர், யுஏஇசேம்பர் மற்றும் அரபு சேம்பர் கூட்டமைப்பு தலைவர்’ அப்துல்லா முகமது அல் மஸ்ரோய் ஆகியோரையும் முதல்வர் சந்திக்கிறார்.

ADQ இன் சிஇஓ முகமது அல் சுவைடி உடனான ஒரு சிறிய சந்திப்பும் அவரது அட்டவணையில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.