தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் மூன்றாவது நாளாக இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இது இனி குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? தற்போது வாங்கலாமா? வேண்டாமா?
தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!
இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்தடுத்த முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய லெவல் உடைப்பு
சில தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாக அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. இது 1950 – 1890 என்ற லெவலியே காணப்படுகின்றது.ஆக இந்த லெவலில் ஏதேனும் ஒரு பக்கம் உடைத்தால், பெரியளவில் மாற்றம் காணலாம் என நிபுணர்கள் கூறியிருந்தனர். ஆக அந்த லெவலை கடந்த அமர்விலேயே உடைத்துக் காட்டிய நிலையில், முடிவிலும் 1962.20 டாலர்களாக முடிவுற்றது. இன்று காலை தொடக்கத்திலும் சற்று குறைந்து 1959.90 டாலர்களாக தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் தொடர்ந்து அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
தங்கத்தின் டெக்னிக்கல் பேட்டர்ன் அனைத்தும் சர்வதேச சந்தையில் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இதே இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் மீடியம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம். நீண்டகால நோக்கில் அடுத்த காண்டிராக்ட்-ல் வாங்கி வைக்கலாம். இது ஏப்ரல் 5 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த காண்டிராக்ட்-ல் ரோல் ஓவர், புராபிட் புக்கிங் என இருக்கலாம். ஆக தங்கம் விலையில் இன்னும் சில தினங்களுக்கு ஏற்ற இறக்கம் தொடரலாம்.
தங்கத்திற்கு ஆதரவு
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில், மீண்டும் பணவீக்கமானது உச்சம் தொடலாம். இதனால் அமெரிக்க மத்திய வங்கியானது மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். நடப்பு ஆண்டில் மட்டும் மொத்தம் 7 வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி அதிகரிப்பு என்பது தங்கத்தின் விலையில் அழுத்தம் கொடுத்தாலும், பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளது.
டாலர் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலரின் மதிப்பானது 98.45 டாலர்கள் என்ற லெவலில் சரிந்த நிலையில், இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனை மேற்கொண்டு உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரையில் நீண்டு கொண்டுள்ளது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்கம் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு
இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 கூட்டமைப்பு சார்பில், ரஷ்யா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் வீழ்ச்சி கண்டு வரும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தங்கத்தை பயன்படுத்தலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜி7 நாடுகள் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிவர்த்தனைகளில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள ரஷ்யாவின் ஸ்டேட் டுமாவினை, குறி வைத்து புதிய சுற்று தடைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று அதிகரித்து, 1962.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும். நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும், தங்கத்தினை போல சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.955 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கிழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 108 ரூபாய் குறைந்து, 51,975 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 103 ரூபாய் குறைந்து, 69,217 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 4854 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 38,832 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து, 5296 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து, 42,368 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 73.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 738 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 73,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.ஆக நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on march 25th 2022: gold price today up for 3rd day in a row
gold price on march 25th 2022: gold price today up for 3rd day in a row/சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்.. தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையவே குறையாதா?