மார்ச் 31 கடைசி நாள்.. கட்டாயம் செய்ய வேண்டிய 4 முக்கிய பணிகள்.. மறந்து விடாதீர்கள்..!

2021-22ஆம் நிதியாண்டின் இறுதிக்கு வந்து விட்ட நிலையில் பலர் அவசர அவசரமாக வருமான வரியை குறைக்கும் முதலீடுகளைச் செய்து வருகிறார்கள், இன்னும் சிலர் அடுத்த நிதியாண்டுக்கான முதலீட்டுத் திட்டம் குறித்து யோசித்து வருகிறார்கள்.

ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!

இப்படிப் பலரும் பல விஷயங்களில் பிசியாக இருந்தாலும் மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளது.

பான் - ஆதார் இணைப்பு

பான் – ஆதார் இணைப்பு

மத்திய அரசு பான் ஆதார் எண்களை இணைக்கப் பல முறை கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது, இதனால் மார்ச் 31க்கு பின்பு கட்டாயம் கால நீட்டிப்பு செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைவரும் பான் ஆதார் எண்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்திருங்கள், இல்லையெனில் உங்கள் பான் கார்டு மத்திய அரசால் ரத்துச் செய்யப்பட்டுச் செல்லாது என அறிவித்துவிடும்.ஆதார் பான்-ஐ ஆன்லைனில் இணைப்பது எப்படி..?
https://tamil.goodreturns.in/news/pan-aadhaar-link-last-date-extended-by-march-2022-026345.html

https://tamil.goodreturns.in/news/how-to-check-pan-aadhaar-link-status-online-023019.html

 

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள்

இந்தியாவில் பணப் புழக்கத்தையும், பணப் பரிமாற்றத்தையும் சரியான முறையில் கண்காணிக்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கி கணக்குகளுக்கும் KYC கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

வங்கி கணக்கின் KYC அப்டேட் செய்யவும் பல முறை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31க்குள் இதைச் செய்யாத பட்சத்தில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம்.

ஐடிஆர் பைலிங்
 

ஐடிஆர் பைலிங்

கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020-21 நிதியாண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியை வருமான வரித் துறை பலமுறை நீட்டித்துள்ளது. கடைசிக் காலக்கெடு மார்ச் 31, 2022 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2021 காலக்கெடுவைத் தவறவிட்டு தாமதமான IT ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்யும் போது, கூடுதல் வரிகளுடன், அபராதத்தையும் செலுத்த வேண்டும்.

தாமதக் கட்டணம் – நிதியாண்டில் மொத்த வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்திற்குக் கீழ் இருந்தால் ரூ. 1,000 அல்லது இல்லையெனில் ரூ. 5,000.

 

PMAY வீட்டு மானியம்

PMAY வீட்டு மானியம்

PMAY திட்டத்தின் மூன்று கட்டங்களில் கடைசிக் கட்டம் மார்ச் 31, 2022 உடன் முடிவடைகிறது.

கிரெடிட் லிங்க்டு மானியத் திட்டம் (CLSS) ஜூன் 2015 இல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY- நகர்ப்புற)- அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தால் (MoHUPA) தொடங்கப்பட்டது.

இத்திட்ட பலன்களைப் பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் வீடு வாங்கினாலோ, அல்லது கட்டினாலோ பெற முடியும். மேலும் இத்திட்டத்தை அடுத்த நிதியாண்டுக்கும் நீட்டிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

4 things need to finish before March 31 or else you will lose from bank account to subsidy

4 things need to finish before March 31 or else you will lose from bank account to subsidy மார்ச் 31 கடைசி நாள்.. கட்டாயம் செய்ய வேண்டிய 4 பணிகள்.. மறந்து விடாதீர்கள்..!

Story first published: Friday, March 25, 2022, 11:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.