ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு| Dinamalar

துபாய்: துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

துபாயில் நடக்கும் உலக கண்காட்சியில், தமிழக அரங்கை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று துபாய் சென்றார்.

இன்று அவர், ஐக்கிய அரபு எமிரேட்சின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார். எமிரேட்ஸ் அமைச்சர்கள் தானி பின் அகமது அல் ஸீயோதி, அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோரை முதல்வர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.