ஏப்ரல் ஆறாம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனவும் அறிவிப்பு.!

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் ஆறாம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,

சட்டமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ந்டைபெறும் என்றும், அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்று  துறை ரீதியிலான மானியக்கோரிக்கை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.