புடின் பதவிக்கு வந்துள்ள ஆபத்து… புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும் படலம் துவக்கம்


சோவியத் யூனியனின் அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலினுக்கு 1953ஆம் ஆண்டு கடுமையான பக்கவாதம் தாக்கியபோது, அவருக்கு நெருக்கமான நான்கு மூத்த அதிகாரிகள் அவரைக் காண ஓடோடி வந்தார்களாம்.

பேருக்குதான் அவர்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமனாவர்கள். உண்மையில், அவர் உயிருடன் இருப்பதைக் காண அவர்களில் யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனாலும், அவர் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்ற பயம் வேறு ஆட்டிப்படைக்க, அப்போதைய இரகசிய பொலிஸ் துறை தலைவரான Lavrentiy Beria, ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தோழர் ஸ்டாலின் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்றாராம் அவர்.

ஆக, பக்கவாதத்தால் ஸ்டாலின் துடித்துக்கொண்டிருக்கும்போது, நான்கு மணி நேரத்துக்கு மருத்துவர்கள் யாரும் அழைக்கப்படவில்லையாம்.

சில நாட்களுக்குள் இறந்துபோனார் ஸ்டாலின்!

அதேபோன்ற ஒரு மனநிலைமைக்கு புடினுக்கு நெருக்கமானவர்கள் வந்துள்ள நிலைமையில், 2,000ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற புடினுடைய பதவிக்கு முதன்முறையாக பயங்கர ஆபத்து வந்துள்ளது.

உக்ரைன் போர் சொதப்ப, அதற்குக் காரணம் நீதான், நீதான் என ஆளாளுக்கு மற்றவர்களை கைகாட்டக் காத்திருக்கிறார்கள். இந்த போரைத் துவக்க நீதான் காரணம் என்றோ, அல்லது நீ ஒரு துரோகி என்றோ, பெரும்புள்ளிகளில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குற்றம் சாட்டப்படும் ஒரு நிலை, ரஷ்ய உயர் மட்ட பெரும்புள்ளிகளுக்கு உருவாகியுள்ளது.

புடினுடைய பலமாகிய இரகசிய பொலிசாருக்கு போரிலெல்லாம் விருப்பமில்லை. அவர்களைப் பொருத்தவரை அவர்களுக்குப் பதவியும் புகழும், பணமும் வேண்டும்.

லண்டன் போன்ற நகரங்களில் சொத்து வாங்குவது, பிள்ளைகளை மேற்கத்திய நாடுகளில் படிக்கவைப்பது என்பது போன்ற ‘உயர்ந்த’ நோக்கங்கள் கொண்ட அவர்களுக்கு, இப்போது இந்த உக்ரைன் போரால் பெரும் சிக்கல். மேற்கத்திய நாடுகள் அவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் தடைகள் விதித்துள்ளதால் அவர்களுக்கு கடும் எரிச்சல்.

ரஷ்யாவும் வடகொரியா போல ஆகிவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள் அவர்கள். ஆகவேதான், புடினை அவர்கள் எப்படியாவது பதவியிலிருந்து நீக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. காரணம், ரஷ்யாவைப் பொருத்தவரை, இரகசிய பொலிசார், இராணுவத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் என்னும் மூன்று பிரிவினர் சேர்ந்தால்தால் அதிபரை பதவியிலிருந்து தூக்கியெறிய முடியும்.

ஆனால், அது புடினுக்குத் தெரியாதா என்ன?

ஆகவே, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, புத்திசாலித்தனமாக காய் நகர்த்தத்தொடங்கியுள்ளார் அவர். இந்த மூன்று பிரிவினரிலும் களையெடுக்கத் துவங்கியுள்ளார் புடின்.

அதற்கு முதல் பலிகடா ஆனது, Colonel-General Sergey Beseda. இரகசிய பொலிஸ் அமைப்பின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவரான Beseda, இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். கூடவே, துணைத்தலைவரான Anatoly Bolyukhம்…

Anatoly Bolyukh செய்த குற்றம் வெளிநாட்டவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக என வைக்கப்பட்டிருந்த நிதியைக் கையாடல் செய்தது என கூறப்படுகிறது.

ஆனால், உண்மையில் அவர் செய்த குற்றம், ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவினால், உக்ரைன் மக்கள் அவர்களை பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்பார்கள், அவர்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என புடினை நம்பவைத்தது.

அடுத்தபடியாக சிக்கியது Roman Gavrilov. தேசியப் படையின் துணைத்தலைவரான Gavrilov மீது இரகசிய தகவல்களை மேற்கத்திய நாடுகளுக்கு லீக் செய்ததாக கூற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புடினுடைய கடுமையான கோபத்துக்குக் காரணம், போராட்டங்களைக் கட்டுப்படுத்தவேண்டிய Roman Gavrilovஇன் தேசியப் படை வீரர்கள், தாங்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டு கொல்லப்படுவதாகக் கூறி, தாங்களே போராட்டங்களில் இறங்கியுள்ளதுதான்.

அடுத்த நபர், பாதுகாப்புத் துறை அமைச்சரான Sergei Shoigu. அவரது மகள் வேறு உக்ரைனுக்கு ஆதரவாக உக்ரைன் கொடியின் வண்ணத்தில் உடையணிந்து வீடியோ எல்லாம் வெளியிட, Shoiguவைக் கடந்த 12 நாட்களாக வெளியே பார்க்கமுடியவில்லை. அவருக்கு இதயப் பிரச்சினை என செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்து, புடின் பதவிக்கு வருவதற்கு உதவியாக இருந்தவர்களில் ஒருவரான Anatoly Chubais. இப்படியே 9 பெருந்தலைகள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், Chubais உஷாராக பதவியை ராஜினாமா செய்துவிட்டு துருக்கிக்கு ஓட்டம் பிடித்துவிட்டார்.

ஆக, தனது பதவிக்கு யாரால் எல்லாம் ஆபத்து என புடின் கருதுகிறாரோ, அவர்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள், அல்லது காணாமல் போய்விட்டார்கள்.
 

இதற்கிடையில், ரஷ்ய மக்களோ, இன்னமும் புடின் கூறும் பொய்களை நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு தொலைக்காட்சியில், Kyivஇல் நியோ நாஸிக்களை அழிப்பதற்காகவும், உக்ரைனில் ரஷ்யர்களுக்கெதிரான இனப்படுகொலையை தடுப்பதற்காகவும் ரஷ்யா ஒரு போர் நடத்தி வருவதாக கூறப்பட, அதை பெரும்பாலான ரஷ்யர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

அது பொய் என்பது மக்களுக்குத் தெரியவரும்போது, மக்கள் தங்கள் நாட்டின் தலைவருக்கெதிராக திரும்பலாம். அப்போது, இந்த நெருக்கமானவர்கள் என அழைக்கப்படும் பெரும்புள்ளிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொருத்துதான் புடினின் தலைவிதி அமையும்! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.