'நுழைவுத்தேர்வு நல்ல விஷயம்தான்'- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 24-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ” ‘அன்று நீட்… இன்று மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு… மத்திய அரசின் நோக்கம் என்ன? ” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Loganayagi Kiritharan
ஏழை மக்களுக்கும் பணவர்கத்துக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க கல்வி ஒன்றே திறவுகோல் அது அவர்களின் நோக்கம்.
Mohammed nadheer
தென் இந்திய மக்கள் படிக்கக்கூடாது. உயர்ந்த இடத்துக்கு வந்தா இவுங்களை கேள்வி கேட்போம். அவுங்களுக்கு பதில் சொல்ல தெரியாது. இது தான் matter.
Chandrabose Bose
நுழைவுத்தேர்வு. நல்லவிஷயம்தான்.
Senthilkumar
தகுதியான  மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் என்பது தெளிவாகிறது.
Mahendran
எதிர்கால இந்தியா இன்றைய மாணவ, மாணவிகள் கையில், அந்த மாணவ, மாணவிகளின் கல்வி சிறந்ததாக இருக்க வேண்டும். அதன் முன் நடவடிக்கையே இதுபோன்ற நுழைவு தேர்வு. இதனால் அறிவார்ந்த இந்தியா உருவாக்கும்.
image
madurai Veeran மதுரை வீரன்
ஒரு நாட்டில் கல்விக்காக நிதியயை குறைத்து கொண்டே போகும் ஒன்றியரசு. கொள்கை சார்ந்ததாக இருக்கும்போது. திறமையான மாணவர்களை உருவாக்க? நுழைவு தேர்வு….எப்படி? இருக்கு…ஒரு நாடு கல்விக்காக நிறைய கட்டமைப்பை ஏற்படுத்த…. ஒன்றியரசு வருசத்திற்க்கு ஒதுக்கும் நிதி பற்றி வெள்ளை அறிக்கை?
balebalu
எல்லாவற்றிற்கும் நுழைவுத் தேர்வு என்றால் +2  பொதுத் தேர்வு எதற்கு ?
chermarajan
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எப்போதுமே மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவம் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவுகோலில் தகுதித்தேர்வு தான் மிக சரியான நோக்கம். அதுசரி தங்களுக்கு என்ன சந்தேகம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.