புதுச்சேரியில் பரவலாக பூத்துக்குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்

கோடைக்காலத்தில் பூக்கும் தன்மை கொண்ட மஞ்சள் கொன்றை பூக்கள் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பூத்துக்குலுங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

கடற்கரை சாலை , சட்டப்பேரவை சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலை பகுதிகளிலும், பாரதி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கொன்றைப்பூக்கள் அதிகளவில் பூத்துள்ளன. மரங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துள்ள பூக்கள் சாலைகளை மஞ்சள் நிறத்தில் அலங்கரித்துள்ளன. சுற்றுலாப்பயணிகள் பலரும் கொன்றை பூக்கள் அதிகமுள்ள மரங்களின் கீழ் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியும் களித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.