கியூபாவில் ஆயிரக்கணக்கான சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு நிற நண்டுகள் கடற்கரையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
கொரோனா காலத்தில் அப்பகுதியில் குறைந்து காணப்பட்ட வாகன போக்குவரத்து காரணமாக நண்டுகளின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சாலையை கடக்கும் நண்டுகள் பல, வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி செத்து மடிவதாக கூறப்படும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வாகன போக்குவரத்து குறைந்ததால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.