உங்களுக்கு இது தெரிஞ்சிருக்காது – வெளியான OnePlus Pad 5G டேப்லெட் தகவல்கள்!

OnePlus நிறுவனம், டெக் சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் கொண்டு வரத் தொடங்கியது. அந்தவகையில், நிறுவனம் OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் பிரீமியம் அம்சங்கள் ஒன்பிளஸ் போனில் இருக்கும் என நம்பியிருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஏமாற்றத்தை தந்தது.

இதை விட குறைந்த விலை கொண்ட RealMe ஸ்மார்ட்போனில், கூடுதல் அம்சங்கள் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ரியல்மி, ஒப்போ போன்ற துணை நிறுவனங்களிடம் இருந்து ஒன்பிளஸ் டிசைனை காப்பி அடித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

இந்த தருணத்தில் நிறுவனம் இந்த ஆண்டின் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் மாதத்திற்குள் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், நிறுவனம் புதிதாக டேப்லெட் கணினியை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

விற்பனைக்கு வரும் Oppo சூப்பர் ஸ்மார்ட் வாட்ச் – அடடே அம்சங்கள்!

ஒன்பிளஸ் பேட் 5ஜி சிறப்பம்சங்கள் (OnePlus Pad 5G Specifications)

கிடைத்த தகவல்களின் படி, Samsung Galaxy Tab S8 series, Xiaomi Pad 5, வரவிருக்கும் Vivo Pad ஆகிய டேப்லெட் கணினிகளுக்கு போட்டியாக நிறுவனம் OnePlus Pad 5G எனும்
Android
டேப்லெட்டை அறிமுகம் செய்யும் எனத் தெரியவந்துள்ளது. OnePlus Pad 5G திறன்வாய்ந்த Snapdragon 865 சிப்செட் கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பெரிய 12.4″ இன்ச் OLED FHD+ டிஸ்ப்ளே கொண்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. குறைந்தது 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் இந்த டேப்லெட் அறிமுகமாகலாம். முக்கியமாக இந்த டேப்லெட்டில் சிறந்த பேட்டரி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் பேட் 5ஜி கேமரா (OnePlus Pad 5G Camera)

ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டை சக்தியூட்ட 10,090 mAh பேட்டரி கொடுக்கப்படும் எனவும், இதனை ஊக்குவிக்க 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பின்பக்கம் இரண்டு கேமராக்களும், முன்பக்கம் சிங்கிள் கேமராவும் இடம்பெறலாம்.

கேமரா சென்சாரைப் பொருத்தவரை, பின்பக்க இருக்கும் டூயல் கேமரா அமைப்பில் முதன்மை சென்சாராக 13MP லென்ஸும், இரண்டாவதாக 5MP சென்சாரும் கொடுக்கப்படலாம். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8MP வைட் ஆங்கிள் கேமரா கொடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Apple-க்கு மாற்று நாங்க தான்… கெத்தா அறிமுகமான Nothing போன்!

ஒன்பிளஸ் பேட் 5ஜி விலை (OnePlus Pad 5G Price in India)

பிளாக், சில்வர் ஆகிய இரு நிறங்களில் இந்த ஒப்போ பேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மெமரி வேரியண்ட் இந்திய மதிப்பில் 34,999 ரூபாய்க்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் டேப்லெட்டில் WiFi வேரியண்ட் வெளியாகுமா என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், கூடுதல் வேரியண்டுகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகள்:

Snapdragon சிப்செட் உடன் வரும் மலிவு விலை Redmi ஸ்மார்ட்போன்!

ரெட்மியுடன் மோதும் Oppo K10 – 50MP கேமராவுடன் அறிமுகம்!

முடிவுக்கு வரும் Wordle: இந்த நாளில் இருந்து நீங்கள் விளையாட முடியாது!

Oneplus-10-Pro விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm SM8450 Snapdragon 8 Gen1டிஸ்பிளே6.7 inches (17.02 cm)சேமிப்பகம்128 GBகேமரா48 MP + 50 MP + 8 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை54590ரேம்8 GBமுழு அம்சங்கள்
அடுத்த செய்திரெட்மியுடன் மோதும் Oppo K10 – 50MP கேமராவுடன் அறிமுகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.