ஒருநாள் இரவில் என் வாழ்க்கை மாறியது : தனுஷ்

பள்ளி பயிலும் மாணவராக இருந்த
தனுஷ்
ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரின் தந்தை கஸ்தூரி ராஜா இனி பள்ளிக்கு போகவேண்டாம் படப்பிடிப்பிற்கு போகலாம் என்றார். இதைக்கேட்ட தனுஷிற்கு ஒன்றும் புரியவில்லை.

இருந்தாலும் தனது அப்பாவின் பேச்சிக்கு மறுபேச்சு பேசாமல் படப்பிடிப்பிற்கு சென்றார். அங்கு பார்த்தல் நீதான் என் அடுத்த படத்தின் ஹீரோ என கஸ்தூரி ராஜா தனுஷிடம் சொல்ல அவர் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் தன் தந்தை மீது நம்பிக்கை வைத்து விருப்பமில்லாமல்
துள்ளுவதோ இளமை
படத்தில் நடித்தார் தனுஷ்.

மீண்டும் அதை செய்யப்போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தனுஷை விமர்சகர்களும், ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களால் காயப்படுத்தினர். இருப்பினும் இதன் காரணமாக தனுஷ் சோர்வடையவில்லை. தொடர்ந்து படங்களில் ஆர்வமாக நடிக்க தயாரானார்.

இம்முறை தனுஷை அவரது அண்ணன்
செல்வராகவன்
இயக்கினார்.காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான செல்வராகவன் தன் தம்பி தனுஷை நடிப்பில் மெருகேற்றினார். அதன் விளைவாக 2003 ஆம் ஆண்டு வெளியான
காதல் கொண்டேன்
படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

தனுஷ்

இப்படத்தைப்பற்றி தனுஷ் கூறுகையில், துள்ளுவதோ இளமை படத்தில் நான் சந்தித்த விமர்சனங்கள் அனைத்தும் இப்படம் வெளியான பின்பு அப்படியே பாராட்டுகளாக மாறியது. இப்படம் வெளியான அன்று இரவு என் வாழ்க்கை மாறியது என்றுதான் சொல்லவேண்டும்.

தனுஷ்

அதுவரை என்னை விமர்சித்தவர்கள் அனைவரும் என்னை பாராட்ட துவங்கினர். எனக்கு மட்டுமில்லாமல் இயக்குனராக செல்வராகவனுக்கும் இப்படம் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. என் நடிப்பு இப்படத்தில் பாராட்டப்பட்டதுக்கு முழு காரணம் செல்வராகவன் மட்டுமே என தனுஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உ பி யில் இருக்கும் வெறித்தனமான ரஜினி ரசிகர்!

அடுத்த செய்தி10 பெண்களோட உறவு வைச்சுருக்கேன்: தனுஷ் பட நடிகரின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.