புதுடெல்லி: தனிநபர் வருமானத்தில் சிக்கிம், கோவாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை, டெல்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சமர்பித்தார். இந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமானத்தில் சிக்கிம், கோவா முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்துள்ளன. டெல்லியின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 16.81 சதவீதம் அதிகரித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லியின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக உள்ளது.