தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாமக இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி இராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி வேட்பாளராக பாமக இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணி இராமதாஸ் போட்டியிட்டார். பிரச்சாரத்தின் இறுதி நாளில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக டாக்டர். அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட 6 பாமக நிர்வாகிகள் மீது தருமபுரி டவுன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி டாக்டர். அன்புமணி இராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் இறுதி நாள் பிரச்சார ஊர்வலத்தில் நான் பங்கேற்கவில்லை. வழக்கிற்கும் எனக்கும் தொடர்பில்லை. எனவே என் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர். அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட 6 பாமக நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.