மீனவர்கள் மீட்பு எப்போது? மத்திய அமைச்சர் பதில்!| Dinamalar

புதுடில்லி-”இலங்கை கடல் பகுதியில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 16 மீனவர்களை, படகுகளுடன் பத்திரமாக மீட்டு வர, இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது,” என, மத்திய அமைச்சர் வி.முரளீதரன் லோக்சபாவில் கூறினார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் லோக்சபாவில் நேற்று கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டு களில், தமிழகத்தை சேர்ந்த 170 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை தவிர மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த 16 மீனவர்களை மீட்கவும், இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும், துாதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.