விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விருதுநகரில் இளம்பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கைதான 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் புதிதாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், 5 குழுக்களாக பிரிந்து விசாரணையை தொடங்கிய போலீசார் முதற்கட்டமாக காப்பகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் யார் யாருக்கு பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.