கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் பஹாமாஸில் படகுப்போட்டியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியை குறிக்கும் வகையில் கரீபியன் தீவுகளுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் ஆகிய இருவரும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.
கொரோனா தோற்று காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரீபியன் தீவான பஹாமாஸில் பிரபலமான Regatta படகுப்போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், பஹாமாஸில் இன்று நியூ பிராவிடன்ஸில் உள்ள மாண்டேகு விரிகுடாவில் நடைபெறும் Regatta எனும் படகுப்போட்டியில் கலந்துகொள்ள வந்தனர். அப்போது, இருவரும் அசத்தலான உடைகளில் வந்து அங்கிருந்த கூட்டத்தையும் மீனவர்களையும் வரவேற்றனர்.
படகுப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுடன், அவர்களது படகில் எடுக்கொண்டும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.
கேட் ஒரு வெள்ளை நிற போலோ டீ-ஷர்ட் மற்றும் கிரீம் நிற சினோ ஷார்ட்ஸ் அணிந்திருந்தார், அதனுடன் மேட்சிங்காக வெள்ளை நிற Superga trainers ஷூஸ் அணிந்திருந்தார். அதே நேரத்தில் வில்லியம் ஒரு நீல சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் ஷார்ட்ஸை அணிந்திருந்தார்.
பின்னர் இருவரும் வெவ்வேறு படகுகளில் ஏறி போட்டியில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் கேட் வில்லியமை தோற்கடித்தார்.