உக்ரைனில் 7 ரஷ்ய ஜெனரல்கள் கொலை


உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் என்று மேற்கத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உக்ரைனில் நடக்கும் போரில் இதுவரை ஏழு ரஷ்ய ஜெனரல்கள் கொள்ளத்தனர் மற்றும் மற்றொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

சமீபத்தில் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தில் 49-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ஸ்டெவ் (Yakov Rezanstev) இறந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Yakov Rezanstev

இதற்கிடையில், 6-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் விலைஸ்லாவ் யெர்ஷோவ் (Vlaislav Yershov), இந்த வார தொடக்கத்தில் கிரெம்ளினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.

ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைன் மீதான ஒரு மாத காலப் படையெடுப்பின் போது காணப்பட்ட பெரும் இழப்புகள் மற்றும் மூலோபாய தோல்விகள் காரணமாக அவர் திடீரென நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மற்றவர்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் உக்ரைனில் நிறுத்தப்பட்ட செச்சென் சிறப்புப் படையைச் சேர்ந்த ஜெனரல் மாகோமட் துஷேவ்வும் (Magomed Tushaev) அடங்குவார்.

ஒரு மாத காலப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் எண்ணிக்கை மேற்கத்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.