2 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அரசு முறை பயணமாக வியாழன் மாலை டெல்லி வந்தார்.
வாங் யீ’’ பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்த நிலையில், லக்னோவில் நடக்கும் உத்தரபிரதேச முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டியிருப்பதால், வெள்ளிக்கிழமை பிரதமர் பிஸியாக இருப்பதாக, இந்திய தரப்பில், அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே’ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று வாங் யீ சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து குறித்து’ ஜெய்சங்கர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், இப்போதைய நிலையில் இந்திய, சீன உறவு சுமுகமாக இல்லை என்பதே உண்மை. எல்லையில் அமைதியை நிலைநாட்ட 1993-96-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை அமல் செய்ய வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டுக்கு சாதகமாக சீனாவின் வெளியுறவு கொள்கை இருக்கக்கூடாது. எல்லையில் இருந்து சீன படைகள் முழுமையாக வாபஸ் பெற வேண்டும்.
சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், அந்நாட்டு அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தப்பட்டது என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
சீனர்கள் சிறப்புப் பிரதிநிதி என்ற முறையில் வாங்’ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித், தோவாலை சீனாவுக்கு அழைத்தார். இதற்கு இரு நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வு எட்டிய உடன் சீனாவிற்கு வருவதாக தோவல் உறுதி அளித்தார். இருப்பினும், பெய்ஜிங்கில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்திற்கு சீனர்கள் இந்தியாவை அழைக்கவில்லை.
முன்னதாக, வாங் யீ’ இஸ்லாமாபாத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார்.
அப்போது “இஸ்லாமிய நண்பர்கள் பலர் காஷ்மீர் குறித்து இன்று நமது கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதே நம்பிக்கையை சீனாவும் பகிர்ந்து கொள்கிறது.” என்றார். அவரது கருத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
“ “