சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி பதவிகள் நிரப்பட்டு உள்ளன. இதையடுத்து, உள்ளாட்சிகளுக்கான நிதியை மாநில அரசு விடுவித்து வருகிறது.
அதன்படி, தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5-வது மாநில நிதி ஆணையம் மூலம் ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது. அத்துடன், 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.639 கோடியும், ஒன்றியங்களுக்கு ரூ.119 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.